கோத்தாவிடம் சேர்ப்பிக்கப்பட்ட அழைப்பாணை!

ஊடகவியலாளர் லசந்த படுகொலை தொடர்பில் அவரது மகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறான அழைப்பாணை கோத்தபாயவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கோட்டாவின் ஊடகப் பேச்சாளரான மிலிந்த ராஜபக்ஸ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமைத் தொடர்பில், எவ்வித அறிவிப்பும் அவரது கைகளுக்கு இதுவரை கிடைக்கவில்லையென கோட்டாவின் ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும் வழக்குத் தாக்கல் செய்துள்ளமைத் தொடர்பான அறிவிப்பானது கோட்டாவிடம் கையளிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.