கோட்டா – மஹிந்த – பசிலுடன் அவசர சந்திப்பை கோரும் சுதந்திரக் கட்சி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் அவசர பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, இவர்கள் மூவருடனும் கட்சியின் சில உறுப்பினர்களுடனும் முக்கிய பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டியுள்ளது என கூறினார்.

மேலும் ஸ்ரீலங்கா பொதியான பெரமுனவுடனான பரந்துபட்ட கூட்டணி இறுதி செய்யப்பட வேண்டும் என சுதந்திரக் கட்சி விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கீழ் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சுதந்திர கட்சி ஆர்வமாக இருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர கூறினார்.

இருப்பினும் தமக்கு சின்னம் தொடர்பாக எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்த தயாசிறி ஜயசேகர, ஆனால் கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் எனக் தெரிவித்தார்.