கோட்டாவை வெற்றியடை செய்வதற்காக வெளிநாட்டிலுள்ள 2 இலட்சம் இலங்கையர்கள் வருகை?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றியடைய செய்வதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் பொதுஜன பெரமுனவே ஜனாதிபதி தேர்தல் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் நாட்டு மக்களின் ஆதரவினை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் வெளிநாடுகளில் வசிக்கும் 2 இலட்சம் இலங்கையர்களையும் வரவழைப்பதற்கான நடவடிக்கைகளையும் பொதுஜன பெரமுன மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தாய் நாட்டைக் காப்பாற்றுவோம். கோட்டாவை வெற்றி பெறச் செய்வோம். நவம்பர் 16 ஆம் திகதி தேர்தலுக்காக நாட்டுக்குச் செல்வோம் எனும் கருப்பொருளில் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் முதலாவது கூட்டம் பிரான்ஸ் – பாரிஸ் நகரில் இன்று இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதில் பேராசிரியர் சன்ன ஜயசுமன உட்பட குழுவொன்று குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸிலுள்ள இலங்கையர் அமைப்பு இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.