கோட்டாவை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதென்ற பேச்சுக்கே இடமில்லையென, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச முன்வந்து, கீத் நொயாரை தாக்கவில்லை, லசந்த விக்ரமதுங்கவைக் கொல்லவில்லை, ரத்துபஸ்வெலவில் தண்ணீர் கேட்டவர்களை கொல்லவில்லை என்று உறுதியளிக்க முடியுமா?

கோட்டாபய ராஜபக்ச காலிமுகத்திடல் நிலங்களை ஷங்ரி லாவுக்கு விற்றபோது, அவரை எதிர்க்க யாரும் தைரியம் இருக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாது. இரண்டாம், மூன்றாம் சுற்று, வாக்குகளை எண்ண வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.