கோட்டாபய- மைத்திரிக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கலந்துரையாடல் சுமார் ஒன்றரை மணிநேரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பாக இருவரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர ஆகியோர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.