கோட்டாபய தலைமையில் கூடவுள்ள முக்கிய கூட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய நாட்களாக அரசாங்கத்தின் நிதி மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புத் தொடர்பிலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படும் என செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவொருபுறமிருக்க, ரயில் பயணிகளுக்கான இலத்திரனியல் அட்டைடையப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் ஒன்லைன் ஊடாக ஆசனங்களை பதிவு செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது காணப்படுகின்ற ரயில் டிக்கட்டுக்கள் மூலம், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பாதிக்கப்படுவதாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, குறித்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.