கோட்டாபயவுக்கு பதிலடி தர தயாராகிறது கூட்டமைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரைக்கு எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் வைத்து பதிலடி வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

“புதிய ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை முழுமையாக வாசிக்க வேண்டும். வாசித்த பின்னர் எங்களுடைய நிலைப்பாட்டைக் கூறுவோம். எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் வைத்து எங்கள் பதில் கருத்தை வழங்கத் தீர்மானித்துள்ளோம்” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

இதேவேளை, “புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் எமது நிலைப்பாட்டை முன்வைப்போம்” என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. யும் தெரிவித்துள்ளார்.