கோட்டாபயவிற்கு ஏற்பட்ட கவலை! பிறப்பிக்கப்பட்ட கடுமையான உத்தரவு

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவினர் தேர்தல் மேடைகளில் பரஸ்பரம் சேற்றை வாரியிறைக்கும் செயல்பாட்டினை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், சொந்தக் கட்சியினரே சக வேட்பாளர்களை திட்டித்தீர்ப்பதும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபடுவதாக ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக கம்பஹா, பொலனறுவை மாத்தறை மாவட்டங்களில் சுதந்திரக்கட்சியினரும் பொதுஜன பெரமுனவினரும் கடுமையான குற்றச்சாட்டுகளை பரஸ்பரம் முன்வைத்து வருவது குறித்து ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

பரஸ்பரம் சேறுபூசும் நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்தவகையான அரசியலை முன்னெடுப்பவர்கள் அதனை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றார்.