கோடிஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

கட்சியின் நிலைப்பாட்டை மீறி, வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள டெலோ கட்சி தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பில், கருத்து வெளியிட்ட அந்தக் கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கம், கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தின்போது இதுதொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

டெலோ அமைப்பின் அரசியல் உயர்பீட கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி வவுனியாவில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக மற்றவர்கள் கூறுவதைப்போல எதுவும் நடக்காது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெறுகின்றது. இதன்போது பலதரப்பட்ட பிரச்சினைகள் பேசப்படும் என கூறினார்.