கொழும்பு ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி! கடுமையான உத்தரவினை பிறப்பித்துள்ள கோட்டாபய

இனிவரும் காலங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் போது பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் எவரும் தாக்குதல் மேற்கொள்ளக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடுமையாக தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமை முன்னணி சோஷலிச கட்சியினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பொலிஸார் செயற்பட்ட முறை மற்றும் ஏற்பட்ட நிலைமை தொடர்பில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பந்துல குணவர்த,

ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போர் மீது முப்படையினர் எவரும் தாக்குதல் மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் போது பொலிஸார், இராணுவத்தினர், கலகம் அடக்கும் பொலிஸார் எவரும் தாக்குதல் மேற்கொள்ளக் கூடாது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஜனாதிபதியோ அமைச்சரவையோ அனுமதிக்கவில்லை.

இதற்கு மாற்று முறை மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதி அவதானமாக இருக்கிறார் என்றார்.