கொழும்பில் ஒன்று கூடும் மொட்டு வேட்பாளர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்களில் களமிறங்கும் அனைத்து வேட்பாளர்களும் இன்று (2) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 4 மணியளவில் சுகந்தாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக வேட்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் சாகல காரயவசம் தெரிவித்தார்.

சட்டதிட்டங்களுக்கு அமைய சமாதானத்துடன், தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வேட்பாளர்களிடம் சத்தியப் பிரமாணம் பெறும் நடவடிக்கை இதன் போது மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தல் கருப்பொருள் குறித்து வேட்பாளர்களை தெளிவுப்படுத்துவதும், இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY