கொன்ககாப்: சமநிலையில் 2 போட்டிகள்

கொன்ககாப் தங்கக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டப் போட்டிகளில், நேற்று முன்தினம் இடம்பெற்ற 2 போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தன.

கொஸ்டா றிக்கா, கனடா ஆகிய 2 அணிகளும் மோதிய போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

ஹொன்டூரஸ், பிரெஞ்சு கயானா அணிகள் மோதிய போட்டி, கோல்கள் எவையும் பெறப்படாது, சமநிலையில் முடிவடைந்தது. இதில், பிரெஞ்சு கயானா சார்பாக விளையாடிய ஃபுளோரென்ட் மலௌடா, இதற்கு முன்னர் பிரான்ஸ் அணிக்காக விளையாடியவர் என்ற ரீதியில், இப்போட்டி, மீளாய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

கொன்ககாப் விதிகளின்படி, அவரால் இத்தொடரில் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY