கொண்டை போட்டது ஒரு குத்தமா: கீர்த்தி சுரேஷ் கதறல்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹிரோக்களுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது விக்ரமுடன் இணைந்து சாமி 2, விஷாலின் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவிற்கு கொண்டை போட்டு வந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு படம் அஞ்ஞாதவாசி.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் கீர்த்தி சேலை அணிந்து உச்சி மண்டையில் கொண்டை போட்டு வந்திருந்தார். இவரது கொண்டயை இணைய வாசிகள் பலர் விமர்சித்து, பல மீம்ஸ்களை தட்டிவிட்டனர்.

தற்போது இத்ற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் கீர்த்தி. கொண்டை போட்ட காரணத்திற்காக என்னை அப்படி கலாய்ப்பதா என வேதனையுட நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். மேலும், த்ரிஷா ஏன் சாமி 2 படத்திலிருந்து விலகியினார் என்று எனக்கு தெரியாது. அவர் விலகியதற்கான காரணம் எனக்கும் தெரிய வேண்டும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY