கொங்கோவில் இடம்பெற்ற பெட்ரோல் டாங்க் விபத்தில் 50 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

கொங்கோ நாட்டில் பெட்ரோல் டாங்கர் லொரி, வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 50 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள கொங்கோ நாட்டின் மத்திய கொங்கோ மாகாணத்தில் இன்று (சனிக்கிழமை) இந்த விபத்து நேர்ந்துள்ளது. அத்துடன் சுமார் 100 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பாதால் இவ்விபத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.