கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான தடை மேலும் நீடிப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

தன்னை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்படி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை எதிர்வரும் 28ம் திகதி வரை கைது செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்யவதற்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY