கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன – ரம்யா நம்பீசன் வேதனை

பீட்சா, சேதுபதி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ரம்யா நம்பீசன். இவர் நடிப்பில் அடுத்ததாக நட்புன்னா என்னானு தெரியுமா என்கிற படம் ரிலீசாக இருக்கிறது.

இந்த நிலையில், ரம்யா அளித்துள்ள பேட்டியில் ’மீ டூ இயக்கம் ஒரு பெரும் அலையாக இப்போது பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு ஓராண்டுக்கு முன்பே கேரள சினிமா துறையைச் சேர்ந்த பெண்கள், ‘டபுள்யூசிசி’ எனும் சினிமாவில் பணிபுரியும் பெண்களுக்கான அமைப்பை உருவாக்கினார்கள்.

தங்களுடைய பிரச்சினைகளை நியாயமான முறையில் பேசத் தொடங்கியவர்களில் பலரை இந்த ஓராண்டில் கட்டம் கட்டி ஒதுக்கியிருக்கிறது கேரள சினியுலகம். கேள்வி கேட்கிறேன் என்பதற்காகவே நான்கு ஆண்டுகளாக எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன” என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.