கூட்டு ஒப்பந்தம் வர்த்தமானியில் வெளியிடப்படாது – பிரதமர் உறுதி

பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளம் தொடர்பாக எதிர்வரும் 05ம் திகதி வர்த்தமானியில் பிரசுரிக்காதிருக்க பிரதர் தீர்மானித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது

இந்த சந்திப்பின் போதே, அடைப்படை சம்பளத்தை 700 ஆக அதிகரிக்க கையெழுத்திட்ட கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் ரணில் இந்த நிலைப்பாட்டினை தெரிவித்ததாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் , கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதில் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் பழனி திகாம்பரம் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.