கூட்டு எதிரணியினரை ஒதுக்கினார் மைத்திரி! – மஹிந்தவுக்கு மட்டும் பதவி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நேற்றைய புதிய அதிகாரிகள் தெரிவின் போது, கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஓரங்கட்டப்பட்டனர். சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபை மற்றும் அகில இலங்கைச் செயற்குழு ஆகியன நேற்று கூடின. இதன்போது, கூட்டு எதிரணியில் அங்கம் வ​கிக்கும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவருக்கும் எந்தவொரு பதவியும் வழங்கப்படவில்லை.

எனினும், கூட்டு எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY