கூட்டமைப்பின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டுவர முடியாது – தயாசிறி

கூட்டமைப்பின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வர முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வர முடியாது. அதற்கென சில படிமுறைகள் காணப்படுகின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்தாலும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற்றுக்கொள்வதும் இலகுவானதல்ல.” என கூறினார்.