கூட்டமைப்பின் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்ன? அமைச்சர் சம்பிக்க கேள்வி

sampikaதமிழர் தரப்பின் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்னவென்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும். சமஷ்டி முறைமை நாட்டை பலப் படுத்தாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஒற்றையாட்சி முறைமையை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை எனவும் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்­பாட்டை வெளிப்படுத்துகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் கூறுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுகின்றது. கடந்த காலத்தில் சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கும் மிகப்பெரிய போராட்டத்தை மேற்கொண்டனர். அந்த போராட்டம் சர்வதேச மட்டம் வரையில் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் இப்போது ஆட்சிமாற்றத்தின் மூலமாக நாட்டில் அனைத்து மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு எட்டப்பட்டு வருகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் துரித மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேபோல் காணிகளை மீண்டும் பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை உருவாக்கி அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியையும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வேலைத்திட்டங்கள் இப்போது ஆரம்பித்துள்ளன. எவ்வாறு இருப்பினும் அரசியல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது.

எனினும் புதிய அரசியலமைப்பு நாட்டை பிரிவினையின் பக்கம் கொண்டுசெல்லும் என்ற தவறான நிலைப்பாட்டிலும் ஒருசிலர் உள்ளனர். அவர்களின் சந்தேகம் அனாவசியமானது. எவ்வாறு இருப்பினும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் வெகு விரைவில் வழங்கப்படும். நாட்டை ஐக்கியப்படுத்தும் எமது வேலைத்திட்டமும் வெற்றியடையும் என்றார்.

1 COMMENT

LEAVE A REPLY