கூட்டணியின் அனைத்து பொறுப்புக்களும் சஜித் பிரேமதாசவிற்கு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய தலைமையிலான புதிய கூட்டணியின் அனைத்து பொறுப்புக்களையும் சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதருக்கான வேட்பாளராக சஜித் பிரேமதாச இருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சின்னம் தொடர்பில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தற்போது இறுதி முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.