குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரிய சியர் லீடர்ஸ் பெண்களின் முகமூடியால் சர்ச்சை

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவின் பியோங்யங் நகரில் நடந்து வருகின்றது. பழைய பகைகளை மறந்து வடகொரியாவும் தனது அணிகளை அனுப்பியுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடந்த ஐஸ் ஹாக்கி பெண்கள் போட்டியில் சுவிச்சர்லாந்து அணிக்கு எதிராக ஒருங்கிணைந்த கொரிய அணி மோதியது.

அப்போது, அணியை உற்சாகப்படுத்த சியர் லீடர்கள் மைதானத்தில் இருந்தனர். அவர்கள் வடகொரியாவில் இருந்து வந்த பெண்கள் ஆகும். போட்டியின் போது, அவர்கள் அணிந்திருந்த முகமூடி சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

வடகொரியா எனும் நாட்டை உருவாக்கியவரும், தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா, கிம் இல் சங்-கின் இளவயது புகைப்படத்தை முகமூடியாக சியர் லீடர் பெண்கள் அணிந்துள்ளனர்.

“பார்த்தீர்களா, கிம் இல் சங் புகைப்படம் மூலம் வடகொரியா தனது பிரச்சாரத்தை விளையாட்டில் கொண்டுவந்துவிட்டது. வடகொரியாவின் புத்தியே இதுதான்” என தென்கொரியாவைச் சேர்ந்த பழமைவாதிகள் குரல் எழுப்ப, தென்கொரிய அரசு ஒலிம்பிக்கில் வடகொரியா பங்கேற்றதே பெரிய விஷயம், இப்போது, இவ்விவகாரத்தை பெரிதுபடுத்தினால் அதன் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என கருதியுள்ளது.

LEAVE A REPLY