குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்க அரசாங்கம் தவறியுள்ளது – மஹிந்த!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்க தவறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

காலி யக்கலமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தாய் நாட்டை பாதுகாப்பதற்காக போராடிய பாதுகாப்பு தரப்பினரை காட்டிக் கொடுக்க அரசாங்கம் தயாராகிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பாக பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் அதற்கு உரிய பதிலை வழங்க அரசாங்கம் தவறியுள்ளது.

நாடு ஒன்றுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அதிகாரம் உள்ளது“ என குறிப்பிட்டுள்ளார்.