குரே,சவேந்திர சில்வா யாழ்.வருகை?

கோத்தபாயவிற்காக ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரங்களை முன்னெடுக்க வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவள்ளார்.நேற்றைய தினம் பொது ஜன பெரமுன கட்சியின் உத்தியோகப்பூர்வ அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ள அவரை வட மாகாணத்தின் சகல ஒருங்கமைப்பு நடவடிக்கைகளுக்காகவும் கோத்தபாய நியமனம் செய்துள்ளார்.

இதேவேளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவை வெற்றியடைச் செய்வதற்காக தான் பாடுபடவுள்ளதாக ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.