குண்டுகளை வெடித்தும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நைஜீரியாவில் பலி…

201602020035200917_Death-toll-rises-to-86-in-Nigeria_SECVPF.gifஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு தினம்தினம் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மயிடுகுரி நகருக்கு அருகே உள்ள டலோரி என்ற கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தனர். முதலில் அங்கிருந்த வீடுகள் மீது வெடிகுண்டுகளை வீசினர். இதில் ஏராளமான வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. மக்கள் உயிர் பிழைப்பதற்காக அலறி அடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். ஆனால் தீவிரவாதிகள் சிறிதும் ஈவு இரக்கமின்றி அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இருந்த போதிலும் சிலர் அங்கிருந்து தப்பி பக்கத்து கிராமமான கமோரிக்கு ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் தீவிரவாதிகளின் வெறி அடங்கவில்லை. ஓடிக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த 3 பெண் தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

சுமார் 4 மணி நேரம் நீடித்த தீவிரவாதிகளின் வெறியாட்டத்துக்கு 65 பேர் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலை யில் நேற்றும் தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து பல உடல்கள் கண்டெடுக்கப் பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்ந்தது. படுகாயம் அடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY