குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொதுமக்களுக்கான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் சேவைகள் நாளை 7 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும், “ கொவிட் – 19 வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, எதிர்வரும், 07, 08, 09 ஆம் திகதிகளில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கும், பிராந்திய அலுவலகங்களுக்கும் பொது மக்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றது.

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, அலுவலக நேரங்களில் (மு.ப. 8.00 மணி தொடக்கம் பி.ப. 4.30 வரை) கீழ்க் காணும் தொலைபேசி இலக்கங்களூடாக அல்லது மின்னஞ்சல் ஊடாக உரிய பிரிவுடன் தொடர்பு கொண்டு, உரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு பொது மக்களை தயவுடன் கேட்டுக் கொள்கிறேம். “ என குறிப்பிடப்பட்டுள்ளது.