கீர்த்தி சுரேஷை வருத்தமடைய வைத்த திரிஷா, நயன்தாரா

அறிமுகமான சில ஆண்டுகளிலேயே மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகையானவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியானார். யாருமே எதிர்பார்க்காத வாறு சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரியாக நடிக்க ஒப்பந்தமானார்.

இதை கேள்விப்பட்டவர்கள் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசா என்று கிண்டல் அடித்தார்கள். ஆனால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிக சிறப்பாக நடித்து அசத்தினார். தென் இந்திய சினிமா மட்டும் அல்லாமல் நாடு முழுவதிலும் இருந்து கீர்த்தியின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்து வருகிறது.

ஆனால் தென் இந்தியாவின் முக்கிய நடிகைகளான நயன்தாராவும் திரிஷாவும் ஒரு வார்த்தை கூட கீர்த்தி நடிப்பு பற்றி பேசவில்லை. பகிரவும் இல்லை. நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தபோது கீர்த்தி மீது நயன்தாரா அதிருப்தியில் இருப்பதாக செய்தி வந்தது.

அதேபோல் சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால் தான் திரிஷா நடிக்காமல் பின்வாங்கினார் என்றும் செய்திகள் வந்தன. இந்த 2 செய்திகளும் உண்மை என எண்ணும்படி அமைந்துள்ளது திரிஷா, நயன்தாராவின் அலட்சியம்.

LEAVE A REPLY