கிழக்கு மாகாணத்தில் நாளை ஹர்த்தாலுக்கு அழைப்பு!

கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கினைப் பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டு இது குறித்த துண்டுப்பிரசுரங்கள் கிழக்கின் பல பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்திற்கு மக்களை நேசிக்கும் ஒரு ஆளுநரை நியமிக்குமாறு கோரியே இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைவாக திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் அனைத்து கடமைகள், வியாபார மற்றும் தொழில் நடவடிக்கைகளை நிறுத்தி ஆட்சேபனை தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.