கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஹிஸ்புல்லா கடமைகளை பொறுப்பேற்றார்!

கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநரான ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வு திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சங்கத்தினரால் வரவேற்பு நிகழ்வொன்றும் இடம்பெற்றிருந்தது.