கிழக்கு சீன கடலில் அமெரிக்க விமானத்தை இடைமறித்த சீனா விமானங்கள்

கிழக்கு சீன கடல் மீது சர்வதேச வான் பரப்பில் கதிர்வீச்சை கண்டறியும் ஓர் முயற்சியில் அமெரிக்காவின் விமானம் ஒன்று ஈடுபட்டிருந்தது. வட கொரியாவால் சாத்தியமான அணுசக்தி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதா என்பதற்கான ஆதாரங்களை கண்டறிய இந்த விமானம் முன்னர் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தது. அப்போது இரு சீன சுகோய் சு-30 ரக போர் ஜெட் விமானங்கள் அமெரிக்க விமானத்தை இடைமறித்து உள்ளது.

இந்த இடைமறித்தல் நிகழ்வானது சீன விமானிகள் விமானத்தை இயக்கிய விதம், இரு விமானங்கள் பயணித்த வேகம் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும்போது , அது ஒரு தொழில் முறையற்ற இடைமறித்தல் என்று கருதப்படுகிறது “‘ என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க விமானப்படையின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்ணல் லோரி ஹோட்ஜ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY