கிழக்கில் உள்ள தமிழ் தலைமைகளுக்கு பகிரங்க சவால் விடுத்தார் எஸ்.வியாழேந்திரன்!

திட்டமிட்ட வகையில் இன இருப்பினை கேள்விக்குள்ளாக்கி பாதிப்பினை தாங்கிக்கொண்டுவரும் சமூகமாக இந்த கிழக்கில் இருக்கின்ற ஒரே சமூகம் தமிழ் சமூகம் ஆகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) தேர்தல் பிரசாரத்திற்கான அலுவலகத்தினை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கில் தமிழர்களின் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு களத்தில் நிற்கின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் கிழக்கில் உள்ள தமிழர்களின் நில வளத்தினையும் உரிமையினையும் அபிவிருத்தியையும் முன்னெடுத்துச்செல்ல தங்களிடம் என்ன திட்டங்கள் உள்ளது என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நில ரீதியாக, வள ரீதியாக, பொருளாதார ரீதியாக, கல்வி ரீதியாக சகல துறை ரீதியாகவும் கிழக்கில் தமிழ் சமூகம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.