கிளாமர் ஹீரோயினாக விரும்பவில்லை – ரெஜினா

சரவணன் இருக்க பயமேன் படத்தைத் தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லை, ஜெமினிகணேசனும் சுரளிராஜனும், ராஜதந்திரம்-2 உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. இதுவரை கிளாமர் காட்சிகளில் அடக்கி வாசித்த ரெஜினா, சரவணன் இருக்க பயமேன் படத்தில் ஓரளவு தாராளம் காட்டி நடித்திருந்தார். அதோடு, அடுத்தபடியாக தமிழில் முன்னணி நடிகையாவதே எனது நோக்கம் என்றும் கூறி வருகிறார்.

இந்த நிலையில், அவரைத்தேடி பல படங்கள் தற்போது அணிவகுத்து வருகின்றன. முக்கியமாக அவரிடம் கதை சொல்லச்சென்ற இயக்குனர்கள் அவரை கமர்சியல் நடிகையாக்கும் நோக்கத்துடன் கதைகள் சொல்லியிருக்கிறார்களாம். ஆனால் அப்படி தன்னை தோலுரிக்கும் நோக்கத்துடன் கதை சொல்ல வந்த டைரக்டர்களிடம் பிடிகொடுக்காத ரெஜினா, இந்த மாதிரி கதைகளில் நடித்தால் நான் கிளாமர் ஹீரோயினாகி விடுவேன். ஆனால் எனக்கு அப்படி நடிப்பது பிடிக்கவில்லை. பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய வேடங்களில் நடிக்கத்தான் ஆசைப்படுகிறேன் என்கிறாராம்.

LEAVE A REPLY