கிம்-உடனான சந்திப்பிற்கு முன்பாக பொம்பியோ – அபே இடையே சந்திப்பு!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று (சனிக்கிழமை) ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சென்றடைந்துள்ளார்.

அங்கு, மைக் பொம்பியோ ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் ஜப்பான் இராஜாங்க செயலாளர் ஆகியோரை சந்தித்து இன்று மாலை கலந்துரையாடவுள்ளார்.

வடகொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணை திட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான பொம்பியோவின் பியோங்யாங்கிற்கான விஜயத்திற்கு முன்பாக இந்த டோக்கியோ விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-இற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ள நிலையிலேயே பொம்பியோவின் வடகொரியாவிற்கான இந்த விஜயம் அமைந்துள்ளது.

இவ்விஜயத்தின்போது, பொம்பியோ வடகொரிய தலைவரை பியோங்யாங்கில் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.