கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தையும் உடனடியாக ரத்து செய்யுமாறு கோரிக்கை

எங்கள் மக்கள் சக்தி பெற்றுக்கொண்டுள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு இலங்கை ராமண்ண மகா நிகயா தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல துறவிகள் இந்த பதவிக்காக போராடி வருவதால் புத்த சாசனத்திற் ஏற்பட்ட அவமதிப்பைக் கருத்தில் கொண்டு ராமண்ண மகா நிகயா சார்பாக வென். ஓமல்பே சோபித தேரர் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்ததா கூறினார்.

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட எங்கள் மக்கள் சக்தி பெற்ற வாக்குகளின் சதவீதத்தின்படி, கட்சி ஒரு தேசிய பட்டியல் இடத்தை வென்றுள்ளது.

இருப்பினும், இந்த பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை,

இதனால் கட்சிக்குள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.