கார் விபத்தில் சிக்கிய நடிகை பார்வதி

மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பார்வதி. ‘டேக் ஆப்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதற்கான விழா டெல்லியில் நடந்தபோது, விருது பெற்ற சிலருக்கு மட்டும் ஜனாதிபதி விருதுகளை வழங்கினார். மற்றவர்களுக்கு மத்திய மந்திரி விருது வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவைச் சேர்ந்த நடிகர் பகத் பாசில், நடிகை பார்வதி மற்றும் சிலர் விருதை புறக்கணித்தனர். இதனால் பார்வதி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு சாரார் பார்வதியின் முடிவுக்கு வரவேற்பும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகை பார்வதி சென்ற கார் நேற்றிரவு திடீரென விபத்தில் சிக்கியது. ஆலப்புழா அருகே கொம்முடி தேசிய நெடுஞ்சாலையில் நடிகை பார்வதி சென்ற கார் மீது இன்னொரு கார் திடீரென மோதியது.

அதிர்ஷ்டவசமாக இதில் பார்வதிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் பற்றி தெரிய வந்ததும் ஆலப்புழா போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

நடிகை பார்வதி ‘பூ’, ‘மரியான்’ உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY