கார்த்தி படத்தில் கதாநாயகியாக அர்த்தனா..!

மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷுடன் சேர்ந்து ‘முதுகாவ்’ என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் அர்த்தனா. ஆனால் மலையாளத்தை விட தமிழில் வெளியான சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’ படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்தது. அடுத்ததாக ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள ‘செம’ படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக அர்த்தனா ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே பாண்டிராஜின் தயாரிப்பில் உருவான ‘செம’ படத்தில் நடித்ததை தொடர்ந்து, தற்போது அவரது டைரக்சனிலும் இவருக்கு கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY