கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றார்

தனியார் டி.வி.க்கான அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீடு மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை கார்த்தி சிதம்பரம், தனது நண்பர்களுடன் சென்னையில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

இது ஏற்கனவே திட்டமிட்ட பயணம் என்றும் ஒரு வாரத்தில் கார்த்தி சிதம்பரம் நாடு திரும்புவார் என்றும் அவரது நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY