கார்த்திக்கு நாயகியாக சாயிஷா சைகல் ஒப்பந்தம்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக சாயிஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

‘பசங்க 2’, ‘கதகளி’ மற்றும் ‘இது நம்ம ஆளு’ ஆகிய மூன்று படங்களைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் பாண்டிராஜ். அக்கதையில் கார்த்தி நாயகனாக நடிக்க, 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இமான் இசையமைப்பாளராகவும், வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளார்கள். நாயகியாக முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். தற்போது சாயிஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

‘கொம்பன்’ படத்தைத் தொடர்ந்து, மீண்டும் கிராமத்து பாணியில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி.

LEAVE A REPLY