காதல் கடிக்குதே… ஓவியாவுக்காக சிம்புவின் அர்பணிப்பு

மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி நடித்து வருகிறார்கள். இதில் அரவிந்த்சாமி தொடர்பான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. இதை தனது மகிழ்ச்சியான அனுபவம் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சூட்டிங்கின் போது, விஜய் சேதுபதிக்கு, சிம்பு சாப்பாடு ஊட்டிய படம் சமீபத்தில் வெளியானது. இந்த படப்பிடிப்புக்கு சிம்பு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே செல்கிறார். மணிரத்னத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நடிப்பில் பிசியாக இருக்கும் சிம்பு, ஓய்வு கிடைக்கும் போது ஓவியா நடித்து வரும் ‘90 எம்.எல்’ படத்துக்கு இசை அமைப்பதற்கான வேலையிலும் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்துக்காக ‘காதல் கடிக்குதே…’ என்ற பாடல் உள்பட 4 பாடல்களுக்கு இசை அமைத்து முடித்திருக்கிறார்.

மணிரத்னம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தான் இசை அமைக்கும் படத்திலும், சிம்பு கவனம் செலுத்தி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இது அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

LEAVE A REPLY