காதலில் விழுந்தாரா காஜல் அகர்வால்?

காஜல் அகர்வால் பற்றிய காதல் கிசு கிசு இது எத்தனையாவது முறை எனத் தெரியவில்லை. அவரைப் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வருவதும், போவதுமாகவே இருக்கிறது. இப்போது காஜலைப் பற்றி அடுத்த காதல் கிசு கிசு ஒன்று டோலிவுட்டில் வெளியாகியுள்ளது.

சென்னையில் பிறந்து தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவரை காஜல் அகர்வால் அடிக்கடி தனிமையில் சந்திக்கிறாராம். இந்த சந்திப்பு, சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடக்கிறது என்கிறார்கள். ஆனால், சிலரோ அவர் ஒன்றும் மிகப் பெரிய ஹீரோவெல்லாம் இல்லை, அவர்களின் சந்திப்பு காதல் சந்திப்பும் இல்லை என்கிறார்கள்.

தொடர்ந்து பத்து வருடங்களுக்கும் மேலாக முன்னணி நாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், தற்போது விஜய், அஜித் ஆகிய இருவருடனும் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார். அவரைப் பிடிக்காத பொறாமை பிடித்த சிலர் தான் இது போன்ற வதந்திகளைக் கிளப்பி விடுகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

இத்தனை வருடங்களில் இது போன்று எத்தனை காதல் கிசுகிசுக்களைப் பார்த்திருப்பார் காஜல் அகர்வால். நல்ல வேளை காதலுடன் நிறுத்திக் கொண்டார்கள்.

LEAVE A REPLY