காதலருடன் நயன்தாரா பொங்கல் பார்ட்டி

i3.phpதை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். நயன்தாரா காதல் விஷயத்தில்தான் வழி பிறந்ததாக தெரியவில்லை.

ஒரு வழியாக விக்னேஷ் சிவனை காதலிக்கிறார் என்ற தகவல் உறுதியானதுபோல் தெரிந்த நிலையில் அந்த காதலில் கல்லெறியும் புல்லுருவிகள் தங்கள் வேலையை மீண்டும் தொடங்கியிருப்பது நயன்தாராவை மட்டுமல்ல விக்னேஷ் சிவனையும் ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது. விக்னேஷ் சிவனை காதலிக்கிறார் என்ற தகவல் ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன் லேசாக கசிய தொடங்கிய நிலையில் திடீரென்று மாஜி காதலன் சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாரா நடித்தார்.

மீண்டும் இணைந்து நடித்தபோது இருவருக்கும் மறுபடியும் காதல் துளிர் விடுவதாக வதந்தி பரவியது. படத்திலும் காட்சிகள் இருவரின் நிஜகாதலை பிரதிபலிப்பதுபோல அமைக்கப்பட்டிருந்தன.

பட ரிலீஸுக்கு முன்னதாக நயன்தாரா, சிம்புக்கு இடையே லடாய் ஏற்பட்டது. பாடல் காட்சியில் நடித்துகொடுக்க மறுப்பதாக நயன்தாரா மீது புகார் எழுந்தது.

ஆனால் தான் கொடுத்த கால்ஷீட்டை பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டதாக சிம்பு தரப்பு மீது நயன்தாரா எதிர் புகார் அளித்தார்.

இந்த சண்டைக்கு தீர்வு காணப்பட்டதோ இல்லையோ ஆனால் ஆண்ட்ரியா நடிக்க பாடல் காட்சியை படமாக்கி முடித்து ரிலீஸ் செய்தனர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா ஜோடியாக டேட்டிங் செய்யத் தொடங்கினார். விழாக்களுக்கு சென்றாலும், வெளிநாட்டுக்கு சென்றாலும் அவரை துணைக்கு அழைத்துச் சென்றார்.

நானும் ரவுடிதான் படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவனுக்கு ஸ்டார் ஹீரோவின் கால்ஷீட் கிடைக்க நயன்தாரா முயற்சிகள் செய்து வந்தார். நாளுக்கு நாள் காதல் இறுக்கமாகி இருவரும் லிவிங் டு கெதர் பாணியில் வாழும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது.

ஏற்கனவே இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக ஒரு தகவல் கூறப்பட்டு வந்தாலும் முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் மற்றொரு தகவல் கசிந்துள்ளது.
இந்தநிலையில் சில வாரங்களுக்கு முன் தனது மற்றொரு மாஜி காதலன் பிரபுதேவாவை நயன்தாரா ரகசியமாக நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்தித்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாஜி காதலன் சிம்புவுடன் மீண்டும் இணைந்து நடித்ததுபோல் பிரபுதேவா படத்திலும் நயன்தாரா நடிப்பதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. ஆனால் காதலர்களாக இருந்தபோது பிரபுதேவாவும், நயன்தாராவும் இணைந்து சொத்துக்கள் வாங்கியதாகவும் அதை முறைப்படி பிரித்துக்கொள்வதற்கான சந்திப்பாக இது அமைந்தது என்றும் இன்னொரு பேச்சு அடிபடுகிறது.

எது எப்படி இருந்தாலும் இப்படியொரு சந்திப்பு மேட்டரை கேள்விப்பட்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா மீது கோபமாக இருக்கிறாராம். ஆனால் இந்த தகவல்கள் எல்லாம் தன்னையும் நயனையும் பிரிக்க நடக்கும் முயற்சிகள்.

ஆனால் நாங்கள் பிரிய மாட்டோம் என்று விக்னேஷ் சிவன் தரப்பு சொல்கிறது. இதை நிரூபிக்கும் வகையில் இருவரும் சேர்ந்து வரும் பொங்கலை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்களாம்.

அத்துடன் பொங்கலை ஒட்டி திரையுலகை சேராத தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கவும் முடிவு செய்துள்ளார்களாம்.

LEAVE A REPLY