காதலருக்காக மடிப்பிச்சை ஏந்தும் நயன்தாரா

Actress Nayanthara in Seenu Gadi Love Story Movie Stills
Actress Nayanthara in Seenu Gadi Love Story Movie Stills
தன் மனம் கவர்ந்த காதலர் விக்னேஷ் சிவனுக்காக மண்சோறு, மடிப்பிச்சை என்று கிளம்பிவிடுவார் போலிருக்கிறது நயன்தாரா.

பெரிய பெரிய ஹீரோக்களுக்கு தானே போன் அடித்துப் பேசும் அவர், “விக்னேஷ் ஒரு நல்ல கதை வச்சுருக்கார். கேளுங்க. நானே அந்த படத்தை தயாரிக்கிறேன். இதுவரை நீங்க வாங்காத சம்பளத்தை தர்றேன்” என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார். ஒருவகையில் இது சரியாக பட்டாலும், நயன்தாரா தயாரிக்கும் படத்தில் நாம கை நீட்டி சம்பளம் வாங்குவதா என்று சிலர் பின் வாங்குவதும் நடக்கிறது. இதற்கெல்லாம் அசராத நயன்தாரா, தன் காதலருக்காகவே தமிழ்ப்பட ஹீரோக்களை மதிக்க ஆரம்பித்திருக்கிறார். யெஸ்… அவரது ஆட்டிட்யூட் முற்றிலும் இப்போது மாறியிருப்பதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். நாலு மாசத்துக்கு முன்னால இருந்த நயன்தாராவா இது என்று வியக்கிற அளவுக்கு சக ஹீரோக்களிடம் அன்பு பாராட்டுகிறாராம். முயலுக்கு றெக்க முளைச்சு கங்காரு ஆவதற்குள் யாராவது கால்ஷீட் கொடுத்துருங்கண்ணே…

LEAVE A REPLY