காணி சுவீகரிப்பைத் தடுக்க நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை!

காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றங்களை நாடி சுவீகரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் எந்த தேவைக்குரிய காணிகளாக இருந்தாலும், காணி அமைச்சு சுவீகரிப்பு அறிவித்தலை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுப்பதுக்கு முன்னர் மாகாண காணி அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டுமெனவும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.

LEAVE A REPLY