காணாமல் போனோர் தொடர்பான அலுவலக தலைவர் நிலையில் இருந்து சாலியபீரிஸ் விலகியுள்ளார்.

சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காகவே தாம் பதவி விலகியுள்ளதாக சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த பதவிவிலகல் செப்டம்பர் 30இல் இருந்து நடைமுறைக்கு வருகின்ற நிலையில் பதவிவிலகலுக்கான கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு முதலாவது தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டார்.

காணாமல் போனோர் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த மார்ச்சில் அலுவலகத்தின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியின்போது வெளியிட்ட அறிக்கையில் காணாமல் போனோர் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து நீதியை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தினதும் அரச நிறுவனங்களினதும் ஒத்துழைப்பை அலுவலகம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அலுவலகத்தின் ஏனைய உறுப்பினர்களாக ஜெயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹன்டி அன்டோன்நெத்தி பீரிஸ், நிமல்கா பெர்ணான்டோ, மிரக் ரஹீம், சோமசிறி லியனகே மற்றும் கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.