காணாமல் போனவர்களின் உறவினா்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் கூறிய காரணம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மீது கடந்த(12.04.2018) ஆம் திகதி கத்திக்குத்து தாக்குதல் நடத்த முற்பட்ட நபா் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

முல்லைத்தீவில் கடந்த 12 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் 400ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மாலை 7.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த மா்ம நபா் ஒருவா் கொட்டிலில் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மீது கத்திகொண்டு தாக்குதல் நடத்த முற்பட்டாாா்.

இந்நிலையில் அங்கிருந்த கதிரை மற்றும் பாத்திரங்கள் மீது வெட்டிவிட்டு தப்பிசென்றுள்ளார்.

இந்நிலையில் வீதிக்காவல் நடவடிக்கையில் நின்ற பொலீஸார் குறித்த சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்கமுற்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த நர் வந்த மிதிவண்டி,மற்றும் பை ஒன்று அதனுள் தொலைபேசி, கத்தி என்பனவற்றை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்த நிிலையில் நேற்றையதினம் (13.04.2018) காலை முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் காணாமல் போனவர்கள் சென்று வழக்கு பதிவு ஒன்று செய்துள்ளார்கள்.

குறித்த நபரிடம் இருந்த கைபேசியினை வைத்துக்கொண்டு தொடர்புகளை ஏற்படுத்திய முல்லைத்தீவு பொலீஸார் குறித்த நபரின் இருப்பிடத்தை இனம் கண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு தியோநகர் கடற்கரைபகுதியில் சிறிய கொட்டில் ஒன்றில் வாசித்து வந்த நிலையில் முல்லைத்தீவு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.

52 அகவையுடைய மட்டக்களப்பினை சொந்த இடமாக கொண்ட க.மகேந்திரராசா என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸார்…….

முன்னுக்கு பின்ன முரணான தகவல்களை தெரிவித்துள்ளதுடன் நான் நிறைந்த மது போதையில் இருந்துள்ளதாகவும் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்றும் அவர் பொலீஸாரின் வாய்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில் குறித்த நபா் மீது ஏற்கனவே பொலீஸ் முறைப்பாடு கிடைத்துள்ளது எனவும் இவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று பொலீஸார் மேலும் தெரிவித்துள்ளனா்.

எனினும் காணாமல் போனவர்கள் குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் குறித்த நபர் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY