காணாமல் ஆக்கப்பட்டோரை புதைதத்து யார்? விமல் அறிவார்

“காணாமல் ஆக்கப்பட்டோரை மண்ணுக்குள் தான் தேடவேண்டும் எனத் திமிர்தனமாகச் சொன்ன விமல் வீரவன்ச அப்படிக் காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கு புதைக்கப்பட்டனர் என்பதையும், யாரால் புதைக்கப்பட்டனர் என்பதையும் நன்கு அறிந்திருப்பார். எனவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ராஜபக்சக்கள் மட்டுமல்ல,விமல் வீரவன்சவும் பொறுப்புக் கூற வேண்டும்.

இவ்வாறு நேற்று (05) நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

மேலும்,

காணாமல்போனோர் இறந்துவிட்டார்கள் எனவும் மண்ணுக்குள்தான் அவர்களை தேடவேண்டுமெனவும் திட்டவட்டமாக வீரவன்ச கூறும் நிலையில் காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்டுவிட்டனர் என்ற கருத்து வெளிப்படுத்தப்படுகிறது. எனவே காணாமல் போனவர்களை கொலைசெய்து புதைத்தவர்கள் யாரென்பது நிச்சயமாக விமல் வீரவன்சவுக்கு தெரிந்திருக்க வேண்டும் அல்லது கொன்று புதைத்தவர்களில் அவரும் ஒருவராக இருக்கவேண்டும். எனவே காணாமல்போனோர் தொடர்பாக பதில் சொல்லவேண்டியவர்கள் ராஜபக்சக்கள் மட்டுமல்ல விமல் வீரவன்சவும் கூடத்தான் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். – என்றார்.