காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்!

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரான பப்லோ டி கிரீப் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை நேற்று சந்தித்தார். கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருநூற்று முப்பத்தைந்தாவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு தீர்வு வேண்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களைச் சந்தித்த ஐ.நா விசேட அறிக்கையாளர், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கொண்டார். நிலைமாறு காலநீதி சம்பந்தமாகவும் அதில் உள்ள குறைபாடுகள் சம்பந்தமாக தெரிவித்த உறவுகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் உறவுகளான தம்முடன் கலந்தாலோசிக்காது எடுக்கப்பட்ட முடிவு என தெரிவித்துள்ளனர்.

அதற்குப் பதிலளித்த அவர் இந்த போராட்டத்தை மதிக்கின்றேன் நீங்கள் கூறியவற்றை கருத்தில் கொண்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY