காணாமல் ஆகப்பட்டோர் குறித்து சுவிஸ் தூதரிடம் கூறப்படும்

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் அடங்கிய கோவைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

இன்று (09) மன்னார் மாவட்டபிரஜைகள் குழுவின் அலுவலகத்துக்கு மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, அங்கு நடைபெற்று வரும் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டதுடன் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகளின் விபரங்களை பார்வையிட்டதுடன் கேட்டும் அறிந்து கொண்டார்.

இங்கு ஆயருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஆளுநர் சபை உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவிக்கையில் இந்த பிரஜைகள் குழுவானது பிரச்சனை காலத்தில் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் முயற்சியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நான் இங்கு வந்து இங்குள்ள செயல்பாடுகளை பார்வையிட்டபோது எனக்கு மனதுக்கு திருப்தி அளிக்கின்றது.

நீங்கள் மாவட்டத்திலுள்ள பிரச்சனைகள் மற்றும் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரின் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டுவதற்கான உங்களுடைய
செயல்பாட்டுக்கு எனது ஒத்துழைப்பும் என்றும் இருக்கும்.

அண்மையில் சுவீஸ் நாட்டு பிரதிநிதிகள் என்னை வந்து சந்தித்தனர். இவர்கள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக என்னிடம் உரையாடுகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக உரையாடினர்

அந்த விடயத்தில் மன்னார் பிரiஐகள் குழுவினால் சேகரிக்கப்பட்டுள்ள
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளதா எனவும் அதை மிகவும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

அவ்வாறு பாதுகாப்பதில் எதாவது பிரச்சனைகள் இருப்பின் தங்களிடம் கையளிக்க முடியும் எனவும் தெரிவித்தனர். அரசியல் சூழ் நிலைகளை கவனத்தில் கொண்டு ஆயராகிய நீங்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டனர். நான் இங்கு வந்து சகல விடயங்களையும் கவனித்ததில் பிரஜைகள் குழுவாகிய நீங்கள் சிறந்த முறையில் செயலாற்றி வருகின்றீர்கள் என்பது புலணாகின்றது.

நீங்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு விடயமும் மனித உயிர் சம்பந்தமான
செயல்பாடாகும். ஆகவே சமய சமூக அங்கந்தவர்களுடன் இணைந்து எமது மக்களுக்காக தொடர்ந்து உங்கள் சேவைகளை செய்யுங்கள் என தெரிவித்தார்.

நான் உங்களுடன் உரையாடி தெரிந்து கொண்டவைகளை இவ் வாரம் இலங்கைக்கான சுவீஸ் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் சந்தித்து கருத்துக்களை தெரிவிப்பேன் எனவும் இங்கு தெரிவித்தார்.