‘காஞ்சனா 3’ படத்தில் இருந்து ஓவியா விலகலா? படக்குழு விளக்கம்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓவியா, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கும் ‘காஞ்சனா 3’ படக்குழுவில் இருந்து விலகியதாக வெளியான தகவலுக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓவியாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. கடை திறப்பு, விளம்பர நிகழ்ச்சிகள் இவரை தேடி வருகின்றன. புதிய பட வாய்ப்புகளும் வந்துள்ளன.

அதுமட்டுமின்றி ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் ‘காஞ்சனா 3’ படத்திலும் நாயகியாக ஒப்பந்தமானார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஓவியா இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் என்றும், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ‘காஞ்சனா-3’ படக்குழுவினர்….

“ ‘காஞ்சனா-3’ படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது. இதில் ராகவா லாரன்சுடன் ஓவியா நடித்து வருகிறார். அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக யாரோ புரளியை கிளப்பிவிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ஓவியா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். ஏன் இப்படி ஒரு வதந்தியை பரப்புகிறார்கள் என்பது தெரியவில்லை” என்றனர்.

LEAVE A REPLY