கவர்ச்சிக்கு மாறிய அமலாபால்

திருமணம் செய்து பிரிந்த பிறகு அமலாபால் முழுவதுமாக மாறி விட்டார்.

முன்பு குடும்பபாங்கான உடை அணிவதில் கவனம் செலுத்திய அமலாபால் இப்போது கவர்ச்சிக்கு மாறிவிட்டார். தனது விதம்விதமான கவர்ச்சிப்படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு வருகிறார். இது பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும் கவலைப்படுவது இல்லை. கண்டு கொள்வதும் இல்லை.

இதுதவிர உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். யோகா செய்கிறார். ஜிம்முக்கு செல்கிறார். ஓய்வு கிடைத்தால் ஊர்சுற்றுகிறார். சூட்டிங் இல்லையென்றால் வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சுற்றுப் பயணம் புறப்பட்டு விடுகிறார். அந்த படங்களையும் இணையதளங்களில் வெளியிடுகிறார்.

படவாய்ப்புகள் வந்தாலும் அதில் பிடித்தமான கதையை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதாக கூறுகிறார். சமீபத்தில் அமலாபால் தலைகீழாக நின்று யோகாசனம் செய்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தனியாக இருந்தாலும், படத்தில் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் பிசியாகவும், சுதந்திரமாகவும் இருப்பதை தெளிவுபடுத்தும் விதமாக அமலாபால் நடவடிக்கைகள் இருக்கின்றன.

LEAVE A REPLY